fbpx
GeneralRETamil NewsTrending Nowworldஉலகம்

1 கோடியே 25 லட்சத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை…! 62 லட்சம் பேர் சிகிச்சை!

World corona status report

ஜெனீவா:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத் துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இந் நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரத்து 66 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 62 லட்சத்து 67 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 98 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 22 ஆயிரத்து 959 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 கோடியே 25 லட்சத்து 33 ஆயிரத்து 855 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close