Others

போக்குவரத்துக் கழகம் இலவச பேருந்து சேவை ….விவரம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் காஞ்சிபுரம் மண்டலத்திற்கு புதிதாக 8 நகரப் பேருந்துகள் வந்துள்ளன விரைவில் ...தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களின் வசதிக்காக நவ. 5 முதல் நவ. 7 வரை 15,659 அரசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்,கிளாம்பாக்கம் சிஎம்டிஏ காலநிலை பூங்கா அருகில் திறந்தவெளி இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்,மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம்,தஞ்சாவூர்மற்றும்நாகப்பட்டினம்மார்க்கமாகசெல்லும்பேருந்துகள்,கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்,மாதவரம் புதியபேருந்துநிலையத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.இந்த நிலையில் கூட்டநெரிசலைக் குறைக்கும் விதமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே சிஎம்டிஏ காலநிலை பூங்காஅருகிலும்,மறைமலை நகரிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த இரண்டு தற்காலிக பேருந்து நிலையங்களுக்கும் பயணிகள் செல்வதற்கு வசதியாக கிளாம்பாக்கம் எம்டிசி பேருந்து நிலையத்திலிருந்து இலவச பேருந்து சேவை இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

Related Articles

Back to top button
Close
Close