fbpx
GeneralRETamil Newsஉலகம்

அமெரிக்காவில் உருவான பதற்றம்…! ஒரே நாளில் 50000 பேருக்கு கொரோனா!

USA Struggles with corona 50000 new cases registered

வாஷிங்டன்:

அமெரிக்காவில் தினந்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 55,251 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 3,097,084 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 133,972 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவை அடுத்து பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் 48,584 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரேசில் நாட்டில் 1,674,655 பேர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், அந்நாட்டில் 66,868 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

3வது இடத்தில் உள்ள இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்து 135 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் இந்தியாவின் மொத்த பாதிப்பு 743,481 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close