fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

அமெரிக்காவில் 1 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி…! தொடரும் உச்சக்கட்ட பாதிப்பு!!

USA corona dead reaches 1 lakh

வாஷிங்டன்:

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 100,580 பேர்கள் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்க அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்துவந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை குறையவில்லை.

அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,549 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 1027 பேர் பலியாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 56,78,026 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 17,25,275பேர் அமெரிக்கர்கள் என்பதும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் அமெரிக்கர்கள் ஆவர்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 3,51,668 பேர் உயிரிழந்துள்ளனர். 24,26,560 பேர் குணம் அடைந்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close