fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

ரூ.11 கோடிக்கு பில் அனுப்பிய மருத்துவமனை…! கொரோனா சிகிச்சை கட்டணமாம்…!

Hospital in USA sends 11 crore bill

வாஷிங்டன்:

அமெரிக்காவில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிக்கு 11 கோடி ரூபாய் பில் அனுப்பி இருக்கிறது ஒரு மருத்துவமனை.

கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரை சேர்ந்தவர் ராபர்ட் டென்னிஸ். ஆசிரியரான இவருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. இதையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் சிகிச்சைக்கு பிறகு  குணமடைந்து வீடு திரும்பிய  அவருக்கு அந்த மருத்துவமனை பில்லை அனுப்பியுள்ளது.

அதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவரது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அதற்கான கட்டணமும் சேர்த்து 1.5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.11.33 கோடி) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ காப்பீடு செய்யப்பட்டதால் பணம் செலுத்த வேண்டியது இல்லை. ஆனாலும் இந்த கட்டணம் அதிகம் என்று அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிகள் கூறுகின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close