RETamil Newsஇந்தியாதமிழ்நாடு

இந்தியாவில் 12 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் போதே பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது மக்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,439 லிருந்து 11,933 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 377 லிருந்து 392 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1306 லிருந்து 1344 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் முதன்மையாக  மகாராஷ்டிரா உள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்தநிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,242 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close