fbpx
Others

பிரதமர் மோடிவெறுப்பு பேச்சு–தேர்தல் ஆணையத்தில்காங்கிரஸ் புகார்..!!

வெறுப்பை பரப்பும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது. பிரதமர் மோடி, நேற்று ராஜஸ்தானில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள், அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் கொடுத்துவிடும். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப்போகிறீர்களா?.மேலும், மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மத ரீதியாக பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், பிரதமரே மதத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார் என்றும், இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும்காங்கிரஸ்உள்ளிட்டஎதிர்க்கட்சிகள்வலியுறுத்திவருகின்றன.இந்நிலையில், வெறுப்பை பரப்பும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் இன்று புகாரளித்துள்ளது. பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் முறையிட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close