fbpx
Others

சூரத்–பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு..

சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!

சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திகூட கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.குஜராத் மாநிலம் சூரத் தொகுதிஎன்பதுபாஜகவின்கோட்டையாகவேபார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதியில் ஏற்கெனவே பாஜக 9 முறை வெற்றி பெற்றுள்ளது.கடந்த 2014, 2019 ஆகிய தேர்தல்களில் சூரத் தொகுதியில் பாஜக சுமார் 75% மற்றும் 76% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த 2024 தேர்தலுக்காக முகேஷ் தலால் பாஜகவின் வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார்.காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் சிலரும் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார்கள்ஆனால் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ

வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் மாற்று வேட்பாளர் ஆகியோரின் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். அதனையடுத்து சுயேச்சை வேட்பாளர்களும் தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.இந்நிலையில்தான் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.தேர்தல் அதிகாரியின் இந்தச் செயல் குறித்து பல்வேறு புகார்களை எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகின்றனர்.சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.இது குறித்து ஒரு யூடியூப் தளத்தில் பேசியுள்ள ஷ்யாம், “10 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் காங்கிரஸ் வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விடுகிறது. மற்ற 8 பேர் மனுவை வாபஸ் வாங்கிக் கொள்கிறார்கள்.மீதம் இருந்தது பாஜக ஒரே வேட்பாளர்தான்.ஆகவேஅவர்போட்டியின்றிவெற்றிபெற்றுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.  வேட்பு மனு சரியாக இல்லை என்பதற்காக மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் தமிழ்நாட்டில் போட்டியிட்ட அண்ணாமலை நீதிமன்றம் பயன்படுத்தக்கூடிய பத்திரத்தாளில் வேட்புமனு தாக்கல் செய்தார். அது சர்ச்சையானது.ஆனால் அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டார். அப்படி என்றால் அண்ணாமலை மனு சரியானதா?இப்போது குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்துள்ளது மிகப்பெரிய சதி என்றுதான் சொல்ல வேண்டும். அதில் மாற்று வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்பட்டவரை கூட நிராகரித்து இருக்கிறார்கள் என்பதுதான் விநோதம்.தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தனது சார்பாக ஒரு மாற்று வேட்பாளரைப்போடுவார்கள்.அப்படிபாஜகசார்பாகபோட்டவேட்பாளரைக்கூடசூரத்தில்நிராகரித்திருக்கிறார்கள் இந்தமுறை தேனி தொகுதியில் போட்டியிடும் தங்கதமிழ்ச்செல்வன் 2001 தேர்தலின் போது ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராக போடப்பட்டார். அன்றைக்கு ஜெயலலிதா வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.உடனே மாற்று வேட்பாளரான தங்கதமிழ்ச்செல்வன் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர் போட்டியிட்டார். அவர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். அதன்பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அப்படிப் பார்த்தால் சூரத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மனுவை நிராகரித்தது ஏன்? அப்படிப் பார்த்தால், காங்கிரஸ் கட்சியின் மாற்று வேட்பாளர் மனுவை ஏன் நிராகரித்தார்கள்? அதுதான் புரியாத புதிராக உள்ளது. அப்படிப் பார்த்தால் இது சதி என்பது புரிகிறது.குஜராத்தை பொறுத்தவரை பாஜக படிப்படியாக பலவீனமடைந்து வருகிறது. குஜராத்தில் பாஜக 5 தொகுதிகளை இந்த முறை இழந்தால் கூட, அது தேசிய அளவில் மிகப்பெரிய செய்தியாகிவிடும்.முன்பே ராஜ்புத் மக்கள் பிரச்சினை தீவிரமாக நடந்துவருகிறது. ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி குஜராத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்க உள்ளது.பாஜகவுக்கு உள்ள பட்டேல் மக்கள் ஆதரவும் குறைந்துவருகிறது.அப்படியானநிலையில்பாஜகவுக்குவெற்றிவாய்ப்பைஏற்படுத்திதர யார் உதவிஉள்ளார்கள்என்றால்சுயேச்சைவேட்பாளர்கள்தான்.  பல சுயேச்சை வேட்பாளர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு போட்டியிலிருந்து விலகிக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்ததாக களத்தில் காங்கிரஸ்தான் உள்ளது. பாஜக Vs காங்கிரஸ் என்ற போட்டியை எதிர்க்கொள்ள முடியாமல் தான் இப்படி குறுக்கு வழிகளில் இறங்கி உள்ளது பாஜக.   இதுவே பாஜகவின் பலவீனத்தை படம்பிடித்து காட்டுவதாகவே நாம் புரிந்து கொள்ள முடிகிறது” என்கிறார்

Related Articles

Back to top button
Close
Close