fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

கொரோனா வைரஸ் காற்றில் பரவாது..! சிஎஸ்ஐஆர் திட்டவட்டம்!

Corona not srable on air says CSIR

டெல்லி:

கொரோனா வைரஸ் காற்றில் பரவாது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றி பல கருத்துகள் நிலவுகின்றன. காற்றின் பரவும், பரவாது என்பது குறித்து இன்னும் சர்ச்சை நிலவி வருகிறது.

32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டது என்றும், காற்றின் மூலம் அது பரவும் என்றும் கூறப்பட்டது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்தது. காற்றின் மூலம் கொரானா வைரஸ் பரவாது என்று அது தெரிவித்துள்ளது.

இந்த கருத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்.) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் ஆய்வக இயக்குனர் சேகர் மாண்டே கூறி இருப்பதாவது:

கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் அவரிடமிருந்து கொரோனா வைரஸ்கள் சில அடி தூரம் காற்றில் பறந்து சென்று கீழே விழும்.

இதை வைத்து அது காற்றில் மிதக்கும் என்று கூற முடியாது. காற்றில் பரவும் வைரஸ்கள் என்பது காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் தன்மை கொண்டவை.

சின்னம்மை, பெரியம்மை, இன்புளூயன்சா போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆனால் கொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது. எனவே இது காற்றின் மூலம் பிறருக்கு பரவாது என்றார்

Tags

Related Articles

Back to top button
Close
Close