fbpx
Othersஅரசியல்

காங்கிரஸ் பவனில் கட்சியின் டிஜிட்டல் உறுப்பினர்சேர்க்கை

மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தொடங்கி வைத்தார்

இந்தியா வல்லரசாக மக்கள் காங்கிரசை தேர்ந்தெடுக்க வேண்டும்-டி.கே.சிவக்குமார்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தொகுதியில் உள்ள காங்கிரஸ் பவனில் கட்சியின் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தொண்டர்கள் தான் கட்சியின் தூண்கள். 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் உறுப்பினர் சேர்க்கையில், தலைவர்கள் அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். கர்நாடக மாநில காங்கிரசில் மாவட்டம், தாலுகா, பிளாக் மட்டத்தில் நடக்கும் தேர்தலில் வாக்களிக்க டிஜிட்டல் உறுப்பினராக இருப்பது கட்டாயம். அனைவரும் கட்சியில் உறுப்பினர்களாகி கட்சியை பலப்படுத்த வேண்டும்.
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு ஊழலில் திளைத்து உள்ளது. வருகிற தேர்தலில் மக்கள் பா.ஜனதா அரசை தூக்கி எறிய வேண்டும். சிறந்த மற்றும் நேர்மையான நிர்வாகம் அளிக்க காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இந்தியா வல்லரசாக…
இந்திய சரித்திரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள வரலாறு வேறு எந்த கட்சிக்கும் இல்லை. காங்கிரஸ் கட்சி நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது மட்டுமின்றி, இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமையை பெற்றுத்தந்தது காங்கிரஸ் கட்சி தான்.
இந்தியா வல்லரசாக மாநிலத்தில் மட்டுமின்றி மத்தியிலும் காங்கிரஸ் கட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆளும் பா.ஜனதா கட்சியினர் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில்லை. மாறாக ஊழல் செய்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். பின்னர் எப்படி நாம் வல்லரசு ஆக முடியும். உள்துறையில் ஊழல் அதிகமாக உள்ளது. சாதாரண புகார் கூட அளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இதற்கு முழு பொறுப்பேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close