fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

வருமான வரி கணக்கை தாக்கல் கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

Income tax filling time extended

டெல்லி:

2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்  கால அவகாசத்தை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு கால அவகாச நீட்டிப்புகளை அறிவித்து வருகிறது.

வருமான வரி தாக்கல் செய்வது, ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு காலவரையறையை நீட்டித்துள்ளது.

அதன்படி, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2018 – 19ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூலை 30ம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது போக, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசமானது 2021 மார்ச் 30ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close