fbpx
GeneralRETamil Newsஇந்தியா

நாட்டில் அதிக உயிர்பலிகளுடன் மகாராஷ்டிரா…! இது கொரோனா லேட்டஸ்ட்!

Huge corona dead in Maharashtra

மும்பை:

நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் 1,695 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  ஆனாலும் பாதிப்புகளும், பலி எண்ணிக்கையும் குறையவில்லை.

மற்ற மாநிலங்களை விட அதிக பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலம் ஆளாகி இருக்கிறது. அதிக அளவாக இங்குதான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  கடந்த 1ம் தேதி 10,498 பேருக்கு பாதிப்பு இருந்தது.

கடந்த 3 வாரங்களில்  அதன் எண்ணிக்கை எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்து விட்டது. 5 மடங்கு உயர்ந்து 52 ஆயிரத்து 667 ஆக இருக்கிறது. பலி எண்ணிக்கை இன்று 1,695 ஆக உயர்ந்துள்ளது. 15 ஆயிரத்து 786 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close