fbpx
Others

போதைப் பழக்கத்தின்தீமைகள் குறித்துவிழிப்புணர்வு…

போதையில்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் - தமிழக அரசு ஏற்பாடு தமிழ்நாடு அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளஅறிவிப்பில்கூறப்பட்டுஇருப்பதாவது;  தமிழ்நாடு அரசு போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகிறது. அந்தவகையில்தமிழ்வளர்ச்சிமற்றும்செய்தித்துறைசார்பில் பல்வேறு போட்டிகளை நடத்திட திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து இளைஞர்கள், பொதுமக்கள் இடையே புகையிலைப் பொருட்கள் மற்றும் மது மீது நாட்டம்ஏற்படுவதை தடுப்பது அரசின் நோக்கமாகும்.மது போதைப் பொருள் பழக்கம் எதிர்கால தலைமுறையினர் இடையே சிந்திக்கும் திறன்களை குறைத்து, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்திட காரணமாக அமைந்திடும்.எனவே, போதையின் தீமைகள் குறித்து விரிவாக விளம்பரம் செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மூலம்”போதையில்லா தமிழ்நாடு” என்கிற தலைப்பில் ரீல்ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ்ஆகியபோட்டிகள்நடத்திடமுன்வந்துள்ளது.இப்போட்டிகளில், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு பிரிவினரும் கலந்து கொண்டு தங்கள் சுயமான கற்பனையில்உருவானபடைப்புகளைநவம்பர்-15ந்தேதிக்குள்[email protected]என்றமின்னஞ்சல்முகவரிக்குஅனுப்பிவைக்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் அனுப்பிவைக்கும் படைப்புகளில் சிறந்த படைப்பாளர்களை தேர்ந்தெடுத்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் அழைத்துபாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிப்பார்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

Related Articles

Back to top button
Close
Close