பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழப்பு
![](https://www.arasuseithi.com/wp-content/uploads/2018/05/flight-crash-..arasu-seithi.jpg)
கியூபாவில் போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு சென்ற பொது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் பயணித்த 105 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்கள் என 114 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை விமானி தரையிறக்க முற்பட்ட போது விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.
இதனிடையே இந்த விமான விபத்தில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் விமானத்தில் பயணம் செய்த 3 பேர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த விமானம் 1979-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது எனவும், கடந்த 39 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்ததாகவும் கியூபா அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.