fbpx
Others

பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜய், தனது எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழா..சிறப்பு செய்தி.

முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதிக்கு ஜாக்பாட்; முதல் கட்டமே ரூ.1,013 கோடி - முழு விவரம் தெரியுமா?தமிழக முதல்வரும், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜய், தனது எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவின் போது தொகுதி குறித்து ஆய்வு செய்ததன் அடிப்படையில், பெரம்பூர் தொகுதி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.முதற்கட்டமாக (Phase-1) ரூ.1,013 கோடி மதிப்பிலான 50 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதுடன், அனைத்து பணிகளையும் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதிக்காக ரூ.1,013 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது. முக்கியமாக, இது முதல் கட்டத் திட்டங்கள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.எம்.எல்.ஏ நிதியில் ரூ.3 கோடி மதிப்பிலான மக்கள் நலத் திட்டங்கள்இதற்கிடையே, பெரம்பூர் தொகுதிக்கான தனது முழு எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.3 கோடியை பயன்படுத்துவது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரனுக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.அதில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்கள்:பெண்கள் பாதுகாப்புக்குமுக்கியத்துவம்ரூ.50லட்சம்செலவில்6நவீனபேருந்துநிறுத்தங்கள்எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எஸ்.எம். நகர் (2 இடங்கள்), எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பாலம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் CCTV கேமரா, Wi-Fi வசதி மற்றும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இணைப்புடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவுள்ளன.

Related Articles

Back to top button
Close
Close