fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

ஒட்டு மொத்த கொரோனா பலி 7 லட்சத்தை நெருங்கியது…! உலக நாடுகள் அதிர்ச்சி!

World corona dead nearing 7 lacks

ஜெனீவா:

உலக நாடுகளில் ஒட்டு மொத்த கொரோனா பலி 7 லட்சத்தை நெருங்கி உள்ளது.

உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.84 கோடியை தாண்டியது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6.96 லட்சமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கி விட்டது. இதுவரை உலக அளவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 1.1 கோடியாகும். மேலும் மருத்துவமனைகளில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 64,732 ஆகும்.

அமெரிக்காவில் 48 ஆயிரம்  பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது நேற்று மட்டும் அமெரிக்காவில் புதிதாக 48,010 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் 27 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் பிரேசிலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 94,702 பேர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தியாவில் 18 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது என்பதும், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 50,629 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close