fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

உலக கொரோனா பாதிப்பு 1.09 கோடியாக உயர்வு….! தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா!

World corona cases reaches 1.09 crore

ஜெனீவா:

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.09 கோடியாக உயர்ந்துள்ளது.

சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளே இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

உலக நாடுகளை விழிபிதுங்க வைத்துக்கொண்டு இருக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

6 மாதங்கள் கடந்தும் வைரசின் வேகம் குறையவில்லை. பாதிப்பு  நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,973,896 ஆக உள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 5 லட்சத்துக்கு 23 ஆயிரத்தை கடந்துள்ளது.  கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையும் 61 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா( 28,36,875)  முதலிடத்தில் உள்ளது. பிரேசில் ( 15,01,353) இரண்டாம் இடத்திலும்,  ரஷ்யா ( 6,61,165) மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்தியா 4ம் இடத்திலும் இருக்கிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close