RETamil Newsஇந்தியா

மே 3-ம் தேதிக்கு பின்னும் ஊரடங்கு அமலுக்கு வருமா !

Will lockdown extend after 3-may

மே 3 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு, மே-16 வரை நீட்டிக்க வேண்டும் என பல மாநில அரசுகள் தெரிவித்து உள்ளன. மேற்கு வங்கம் மாநிலத்தில் சிவப்பு மண்டலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.மேலும் 15 நாட்கள் ஊரடங்கை நீடிக்க மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்து உள்ளார்.

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் அந்த மாநிலத்தில் உள்ள சிவப்பு மண்டலங்களில் ஊரடங்கை தொடர உத்தரவிட்டார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ஹரியானா, இமாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்கள்,ஊரடங்கை நீட்டிக்கும் விவகாரத்தில் மத்திய அரசை பின்பற்ற முடிவு எடுத்துள்ளனர்.

மே-4ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என எதிர்பார்ப்புகள் குவிந்து உள்ளன. இதனை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.” ஊரடங்கு தொடர்பான விரிவான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது, ஊரடங்கிற்கு பிறகு நல்ல முன்னேற்றம் உள்ளது” என உள்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதிக பாதிப்பு உள்ள இடங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சர்க்கரை நோய் (Diabetes) காரணமும் அறிகுறியும்

Tags

Related Articles

Back to top button
Close
Close