fbpx
HealthRE

சர்க்கரை நோய் (Diabetes) காரணமும் அறிகுறியும்

Diabetes causes and symptoms

சர்க்கரை நோய் ( Diabetes ) என்பது உங்கள் இரத்த குளுக்கோஸ் அதிகரிப்பால் வரக்கூடிய நோயாகும். இது நீங்கள் உண்ணும் உணவில் இருந்து வருகிறது. கணையத்தில் இருக்ககூடிய பீட்டா அணுக்களின் மூலம் உற்பத்தியாகும் இன்சுலின் சுரப்பியின் செயல்திறனால் நாம் உண்ணும் உணவிலிருந்து உருவாக்கப்படும் அளவுக்கு மீறிய குளுக்கோஸ், இரத்தத்தில் கலப்பதால் சர்க்கரை நோய் ( டயாபடீஸ் ) மனிதனுக்கு வருகிறது.

இது பரம்பரை நோயாகும். உலக சுகாதார அமைப்பின் தரப்பில் வெளியான அறிக்கை ஒன்றில் உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய பதினோரு பேரில் ஒருவர் நீரிழிவு ( சர்க்கரை ) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது .

1980 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 108 மில்லியனாக இருந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு 382 மில்லியனாக உயர்ந்து , 2015 ஆம் ஆண்டு 422 மில்லியன் மக்களாக உயர்ந்து உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சர்க்கரை நோய்கள் 18 வகைப்படும்.

இந்த 18 வகைகளையும் 3 வகைகளுக்குள் பிரித்துள்ளனர் மருத்துவர்கள், அதில் இரண்டாம் வகையில் ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இன்சுலினின் உணர்திறன், உடல் பருமன் , அதிகக் கொழுப்புப் படிவு , உயர் இரத்த அழுத்தம் , புகையிலை நுகர்வுகள் , மதுப்பழக்கம் போன்றவை காரணிகளாக அமைகின்றன .

 

1.முதல் வகை சர்க்கரை நோய் (Diabetes)

முதல் வகை ( Type I Diabetes – IDDM Insulin Dependent Diabetes Mellitus ) சர்க்கரை நோயின் முதல் வகையான இந்த டைப் 1 டயாபடீஸால் குழந்தைகளும் , சிறுவர்களும் மற்றும் இளம் பருவத்தில் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் . பிறவியிலேயே இவர்களுக்கு இருக்கும் இன்சுலின் குறைபாடே இதற்கு காரணம் . இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கப்படும். இவர்களின் கணையத்தில் உள்ள பீட்டா அணுக்களின் குறைவான செயல்திறனை சிகிச்சையின் மூலம் செயற்கையாக அதிகரித்து இன்சுலின் சுரப்பியினை அதிகம் சுரக்கச் செய்வதே இதற்கான தீர்வாகும், உலகில் 10 சதவீத மக்கள் இந்த முதல் வகையால் பாதிக்கப்படுகின்றனர்.

2.இரண்டாவது வகை சர்க்கரை நோய் (Diabetes)

இரண்டாவது வகை ( Type II – NIDDM – Non Insulin Dependent Diabetes Mellitus ) சர்க்கரை நோயின் இரண்டாவது வகையான இந்த டைப் 2 டயாபடீஸால் ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனவும் மது அருந்துதல் , சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது , புகைப்பிடிப்பது போன்ற செயல்களும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த வகை சர்க்கரை நோய் இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது . இதனை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு சர்க்கரை நோய் என்றும் கூறுவார்கள். இந்த வகையில் உடல் எடையைக் குறைப்பதாலும் , உணவுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர்.

 

3.மூன்றாவது வகை சர்க்கரை நோய் (Diabetes)

சர்க்கரை நோயின் மூன்றாவது வகையான இந்த டைப் 3 டயாபடீஸால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு தற்காலிக சர்க்கரை நோயாகும். இது இரண்டு சதவீதம் முதல் நான்கு சதவீதமான பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது ஏற்படும் சர்க்கரை நோய், குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடும். இருப்பினும் இது பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு (சர்க்கரை) நோய் உண்டாக காரணமாக உள்ளது. இது இரைப்பை குடல் மற்றும் நாம் உண்ணும் உணவிலிருந்து குளுக்கோஸ் எடுத்து இரத்தத்தில் செலுத்தும் நேரத்தில் கணையத்திலிருந்து இன்சுலின் மூலம் உற்பத்தியாகும் குளுக்கோஸ்யையும் இரத்தத்தில் செலுத்துவதால் ஏற்படும் சர்க்கரை நோய் ஆகும்.

நோயின் அறிகுறிகள் :

1 . அடிக்கடி சிறுநீர் கழிப்பது
2 . அடிக்கடி தாகம்
3 . அதிக பசி
4 . மிக வேகமாக எடை குறைதல்
5 . அதிகமாக சோர்வடைவது
6 . கண்பார்வை மங்குதல்
7 . பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close