fbpx
GeneralRETamil NewsTrending Nowworldஉலகம்

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் தடை நீக்கம்…! அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

USA lifts ban to travel other countries

வாஷிங்டன்:

கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை, அமெரிக்கா நீக்கியுள்ளது.

கொரோனா பரவ துவங்கிய போது, சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என, மக்களை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டது. கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், அமெரிக்கர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள, அந்நாட்டு அரசு தடை விதித்தது.

இந் நிலையில், அமெரிக்காவில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. ஆகையால், வெளிநாடுகளுக்கு செல்ல, அமெரிக்கர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, அரசு நீக்கியுள்ளது. ஆனாலும், ‘சீனா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் உட்பட, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவல் குறையாததால் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என, அந்நாட்டு சுகாதாரத் துறை, மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close