fbpx
GeneralRETamil Newsஉலகம்

நோ’…! ‘நோ’…! சீன விமானங்களுக்கு அனுமதி மறுத்த அமெரிக்கா…!

US announces ban on china flights

பெய்ஜிங்:

சீன நாட்டு விமான நிறுவனங்களை ஜூன் 16ம் தேதி முதல் அமெரிக்காவில் பறக்க தடைவிதித்துள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசானது சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவியது. உலகில் உள்ள 200 நாடுகளுக்கு பரவிய இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா.

இதை சீன வைரஸ் என்று அதிபர் டிரம்ப் விமர்சித்து இருந்தார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.

இந்நிலையில் சீன நாட்டு விமான நிறுவனங்களை ஜூன் 16ம் தேதி முதல் அமெரிக்காவில் பறக்க தடைவிதித்துள்ளதாக அமெரிக்க அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது இரு நாடுகள் இடையேயான மோதல் போக்கை மேலும் அதிகரித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close