fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

மோடி நல்ல மனநிலையில் இல்லை….! சீனா விவகாரத்தில் சிண்டு முடியும் டிரம்ப்!

Trump comments modi

வாஷிங்டன்:

சீன எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார்.

இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது. எல்லையில் இந்தியா சாலைகள், பாலங்கள் அமைக்கும் பணிகளுக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. அந்த பகுதிகளில் சீனா, ராணுவ வீரர்களையும், தளவாடங்களையும் குவித்து வருகிறது.

இந்நிலையில் சீன விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:

பிரதமர் மோடியுடன் சீனா எல்லை விவகாரம் குறித்து பேசினேன். அவர் நல்ல மனநிலையில் இல்லை.

நான் மோடியை மிகவும் விரும்புகிறேன். நல்ல மனிதர். அதிக மக்கள் தொகை கொண்ட 2 நாடுகளும் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறியுள்ளார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close