fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

ஜூலையில் பிளஸ் டூ ரிசல்ட்…! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

Minister sengotaiayan about +2 result

சென்னை:

12ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

விடைத்தாள்களின் மொத்த மதிப்பெண்களை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கப்படும். பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணம் விரைவில் நிர்ணயிக்கப்படும்.

தனியார் பள்ளிகள் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும். பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close