fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

சீனாவில் தோன்றியது புது வைரஸ்…! எளிதில் பரவ வாய்ப்பு என எச்சரிக்கை!

New virus isolated in china

பெய்ஜிங்:

சீனாவில் வேறொரு புதிய வைரஸ் உருவாகி இருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். இன்று 200 நாடுகளில் 1 கோடி பேரை பாதித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பலியாகிவிட்டனர்.

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இரவு பகலாக போராடி வருகின்றனர். இந்நிலையில் புதிய வைரஸ் பரவி வருவதாக சீன ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவில் பன்றிகளுக்கு புதுவிதமான வைரஸ் காய்ச்சல் ஏற்பட, இந்த வைரஸ் மனிதர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். வரும் காலங்களில்  இந்த வைரசால் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close