fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

சீனாவை ஓவர்டேக் செய்த மும்பை….! எதில் தெரியுமா..?

Mumbai registers high corona dead, compared to china

மும்பை:

மும்பை கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் வைரஸ் தோன்றிய நாடான சீனாவை முந்தியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. ஹூபெய் மாகாணத்தில் வேகமெடுத்த இவ்வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் பரவியது.

இந் நிலையில் சீனாவின் மொத்த கொரோனா பாதிப்பு 83,565 ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,634 ஆகவும், கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 22-வது இடத்திலும் உள்ளது.

இந்த இரண்டு எண்ணிக்கையையும் மும்பை மாநகரம் முந்தியுள்ளது. மும்பையில் மட்டும் மொத்த கொரோனா பாதிப்பு செவ்வாய் நிலவரப்படி 85,724 ஆகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 4,938 ஆகவும் உள்ளது. மாநில அளவில் பார்த்தால் மஹாராஷ்டிராவானது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளை விட அதிகம் பாதித்துள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரப்படி 9,026 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2.11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 87,681 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close