fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

உலக நாடுகளில் அதிக கொரோனா பாதிப்பு..! ரஷ்யாவை முந்தி 3வது இடத்தில் இந்தியா!

India becomes 3rd worst corona hit country

டெல்லி:

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா ரஷ்யாவை முந்தி 3வது மோசமான நாடாக பட்டியலில் இடம் பெற்றது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவல், இந்தியாவில் அதிவேகம் எடுத்துள்ளது. நேற்றும் தொடர்ந்து 3-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்துள்ளது.

ஒரே நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 850என்று ஆனது. மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா, அசாம், பீகார் ஆகிய 7 மாநிலங்கள் மட்டுமே 78 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,074 பேருக்கு தொற்று உறுதியானமு. இதன் மூலம் அங்கு மொத்தம் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து விட்டது.

இந்தியாவில் நேற்று மொத்தம் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 ஆக உள்ளது. இதன்மூலம், கொரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரஷியாவை இந்தியா முந்தி உள்ளது.

ரஷியாவில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நிலவரப்படி 6 லட்சத்து 80 ஆயிரத்து 283 ஆகும். இந்தியா தற்போது கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close