RETamil NewsTrending Nowஉலகம்
பொலிவியா அதிபருக்கு கொரோனா…! தனிமையில் சிகிச்சை!
Bolivia president Jeannine ariez got corona

சுக்ரே:
பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக வருகிறது. வைரஸ் தொற்று காரணமாக கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொலிவியா நாட்டில் 42,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், பொலிவியா நாட்டு அதிபர் ஜினைன் அனேஸ்- க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அனேஸ், நலமுடன் இருப்பதாகவும், தனது பணிகளை தனிமைப்படுத்திக் கொண்டபடியே தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொலிவியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட 7 அமைச்சர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
















