செங்குன்றம்–பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது.

சென்னைக்கு அருகே செங்குன்றம் மார்க்கெட்டில் தற்போது மாம்பழ சீசன் களைகட்டி உள்ளது. மங்கனபள்ளி, ருமானி, செந்தூரா, நீலம், பெங்களூரா, போன்ற பல்வேறு வகையான மாம்பழங்கள் சாலையோரங்களில் குவிக்கப்பட்டு விற்கப்படுகிறது.குறிப்பாக ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, மாதவரம் பகுதிகளில் உள்ள மாந்தோப்புகளில் இருந்து பழங்கள் விற்பனைக்கு வருகிறது.இது மட்டுமல்லாது பழக்கடைகளில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சேலம், நெல்லை, விழுப்புரம், தேனி போன்ற பகுதியில் இருந்து பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது.
ருமானி 100 ரூபாய்க்கு இரண்டு கிலோ, பங்கன பள்ளி ஒன்றரை கிலோ 100 ரூபாய்,நீலம் 3 கிலோ 100 ரூபாய் என விலை குறைவாக கிடைக்கிறது.தோட்டத்திலிருந்து நேரடியாக வருகின்ற பழங்கள் என்பதால் கல் வைத்து இருக்கிறதோ வேறு ஏதாவது போட்டு பழுக்க வைக்கும் பழங்கள் அல்லாமல் சுகாதார முறையில் இந்த பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.ஆகவே சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கிறார்கள் மிகவும் இனிப்பாக இந்த பழங்கள் இருப்பதாகவும், சுவையாக இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.கிராமப் பகுதியில் இருக்கிற பெண்கள் இந்த சீசன் மாம்பழங்களை விற்பதற்கு மிகவும் அவலோடு இந்த சாலை ஓரத்திலே வைத்து விற்பது மகளிர் வேலைவாய்ப்புக்கு ஒரு நல்ல வழியாக இந்த விற்பனை தெரிகிறது.