அம்மோனியா வாயு கசிவினால் 7 தொழிலாளர்கள் பலி.. என்ன நடந்தது?

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ராஜ், இந்த கேஸ் லீக் சம்பவத்தால் மொத்தம் 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் 7 பேர் பலியானதாக பரவி வரும் செய்திகள் முற்றிலும் வதந்தி. பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம்.பாதிப்புக்குள்ளான 66 நபர்களில் 60 பேர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள். தற்சமயம் மீதமுள்ள 64 பேருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேரும், வேல்ஸ் மருத்துவமனையில் 27 பேரும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர்.குறிப்பாகஸ்டான்லிமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் தற்போது செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள ஒவ்வொரு நோயாளிக்கும் தலா ஒரு அவசரக்கால சிகிச்சை மருத்துவர் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் அடங்கிய தனி மருத்துவக் குழுவினர் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களைத் தமிழக அரசின் செலவிலேயே அவர்களின் சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத அந்தத் தனியார் நிறுவனத்தின் உரிமையாளருக்குப் பின்னால் எவ்வளவு பெரிய அரசியல் செல்வாக்கு இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் (21.06.2026) தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அம்மோனியாவாயுகசிவினால்ஏற்பட்டவிபத்துதொடர்ந்துபெரியபாளையம்அருகிலுள்ளதனியார்மருத்துவமனையிலும்,நல்லூர்சுங்கச்சாவடிஅருகிலுள்ளதனியார்மருத்துவமனையிலும்அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைமாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார்.ரா அவர்கள், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் திரு.கே.பி.கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள், மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ்.விஜயகுமார் அவர்கள் (கும்மிடிப்பூண்டி), மரு.எம்.எஸ்.ரவி அவர்கள் (பொன்னேரி), மரு.அருண் குமார் அவர்கள் (திருவள்ளூர்), காஞ்சிபுரம் சரக காவல் துணைத் தலைவர் திரு.ஜி. சாசங்க் சாய், இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாய் பிரனீத்,இ.கா., மாவட்ட சுகாதார அலுவலர்(திருவள்ளூர்) மரு.பிரியா ராஜ் மற்றும் பல்துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
