fbpx
Others

புதுச்சேரியில்இலாகா ஒதுக்கீட்டில் உள்ள இழுபறி அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது…?

புதுச்சேரியில் ஆட்சியை பிடித்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அரசியல் பனிப்போர் ஓய்ந்தபாடில்லை. அமைச்சர்கள் தேர்வு, இலாகா பங்கீடு, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு என, அனைத்தும் குழப்பத்தில் மூழ்கி கிடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக முடங்கி கிடக்கிறது.கடந்த மே 13ல், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராகவும், அவருடன் பா.ஜ.,புதுச்சேரி சட்டசபை தேர்தல், Puducherry Assembly Elections நமச்சிவாயம், என்.ஆர்.காங்., மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாகவும் பதவியேற்று கொண்டனர். ஆனால், பொறுப்பேற்று ஒரு மாதமாகியும், யாருக்கும் இலாகா ஒதுக்கப்படவில்லை. இதனால் இலாகா இல்லாத அமைச்சர்களாக வலம் வருகின்றனர்.பின் ஒருவழியாக, கடந்த 17ல் என்.ஆர். காங்., ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் பா.ஜ.,ராஜசேகரன்ஆகியோர்அமைச்சர்களாகபதவியேற்றனர்.அமைச்சரவைமுழுமையடைந்ததால், அன்று மாலையே முதல்வர் உள்ளிட்ட 6 பேருக்கும் துறைகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.பவர் புல்’ இலாகாக்களான உள்துறை, நிதி, பொதுப்பணி போன்ற துறைகளை தங்கள் வசம் வைத்துக் கொள்ள என்.ஆர்.காங்., – பா.ஜ., இடையே ஏற்பட்டுள்ள போட்டா போட்டி காரணமாக, இலாகா ஒதுக்கீட்டில் இழுபறிநீடித்துவருகிறது.இந்நிலையில்,பா.ஜ.,புதுச்சேரிமாநிலபொறுப்பாளரான நிர்மல் குமார் சுரானா, முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பலனாக, அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு முடிவாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என முதல்வர் கூறினார். பா.ஜ., தரப்பிலோ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய சிலதகவல்களை, சுரானா முதல்வரிடம் தெரிவித்ததாக கூறுகின்றனர். இதனால், இலாகா ஒதுக்கீட்டில் உள்ள இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது.முழு அமைச்சரவையும் செயல்பாட்டிற்கு வராததால், புதுச்சேரியில் அரசு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது

Related Articles

Back to top button
Close
Close