ரயில் பெட்டிகள் கொரோனா வார்டாக மாற்றம்…! ரூ.620 கோடி ஒதுக்கீடு!
Railway coach corona ward rs 620 crore allotted

டெல்லி:
ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு, மத்திய அரசு, 620 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றும் நடவடிக்கை ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே வாரிய தலைவர், வி.கே.யாதவ் கூறியதாவது: ரயில் பெட்டிகளை தனிமை வார்டாக மாற்று வதற்கு, மத்திய அரசிடமிருந்து, 620 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பெட்டியையும் வார்டாக மாற்றுவதற்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் செலவாகிறது. கொரோனாவால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய தொழிலாளர்கள், ஏற்கனவே சிறப்பு ரயில்கள் மூலமாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி விட்டனர்.
தற்போது நிலைமை மேம்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் மீண்டும் தாங்கள் பணியாற்றிய மாநிலங்களுக்கு திரும்பும் நடவடிக்கை அதிகரித்து உள்ளது. உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பீஹார் போன்ற மாநிலங்களில் இருந்து, நாட்டின் பெரும் நகரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன் வாயிலாக,.மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப, கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்று கூறினார்.
















