6 லட்சம் வழக்குகள்..! ரூ. 14 கோடியை நெருங்கும் ஊரடங்கு அபராதம்…!
Lockdown penalty reachesRs. 14 crore

சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம், ரூ. 13,60,16,335 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது நடவடிக்கை, வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 6,63,772 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 4,80,838 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விதிகளை மீறியதாக 6,14,061 வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர்களிடம் இருந்து ரூ. 13,60,16,335 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















