GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தேர்வு..! பிரதமர் மோடி நன்றி ..!
PM modi say thanks through twitter

டெல்லி:
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியாவுக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி கூறி உள்ளார்.
ஐ.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.
மொத்தம் 10 நாடுகள் சுழற்சி முறையில் இடம்பெற்று வருகின்றன.
நியூயார்க்கில் 2020 – 21ம் ஆண்டுக்கான தேர்தலில் ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா தேர்வானது.
இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமில்லாத உறுப்பினராக தேர்வாக ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி என்றும் உலக ஒற்றுமை, பாதுகாப்பை மேம்படுத்த அனைத்து நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றும் என்று கூறி உள்ளார்.
















