GeneralRETamil NewsTrending Nowஇந்தியா
ஆளுநர் மாளிகையில் ஆறு பேருக்கு கொரோனா…! தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு!
6 rajbhavan employees got corona in madya Pradesh

போபால் :
மத்திய பிரதேச ஆளுர் மாளிகை ஊழியர்கள் குடியிருப்பில், 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த பகுதியதடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாநில ஆளுநராக லால்ஜி டாண்டன் உள்ளார். ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் ஊழியர்கள் குடியிருப்பில், ஊழியர் ஒருவரது மகனுக்கு, இரு தினங்களுக்கு முன் கொரோனா உறுதியானது.

இதையடுத்து, அவரது குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும், ஆளுநருடன் நேரடி தொடர்பில் இல்லை என்று கூறப்படுகிறது.
ஆனாலும், ஆளுநர் டாண்டன் உட்பட, அனைவருக்கும், பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில், 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதால், அப்பகுதியை, தடை செய்யப்பட்ட பகுதியாக, அறிவிக்கப்பட்டுள்ளது.















