ரயில்களுக்கு முன்பதிவு இன்று முதல் தொடக்கம்: பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்!
Train reservation today

டெல்லி:
4ம் கட்ட ஊரடங்கு மே இறுதியுடன் முடியும் நிலையில் ஜூன் முதல் தொடங்க உள்ள ரயில் சேவைகளுக்கு முன்பதிவுகள் இன்று தொடங்குகின்றன.
ஜூன் முதல் 200 ரயில்கள் இயங்கும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்திருந்தது. அதற்கான கால அட்டவணையையும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் இயக்க உள்ள ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. அதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் தொடங்குகின்றன. இதுகுறித்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை கவுண்டர்கள் திறந்திருக்க வேண்டும் என்பதை முதன்மை வர்த்தக மேலாளர் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் சுகாதார விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.















