fbpx
Tamil NewsTrending Nowஇந்தியா

திருப்பதி தேவஸ்தானம் திறக்கப்படுகிறதா…? அதிகாரிகள் நடத்திய முக்கிய ஆலோசனை

Tirupathi devasthana officer’s discussion

திருப்பதி: மே 17ம் தேதி ஊரடங்கு முடிய உள்ள நிலையில் அதன் பின்னர் திருப்பதி தரிசனம் தொடங்கலாமா என்பது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளது. அதன் காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டன.  மார்ச் 20ம் தேதி முதல் திருப்பதி தேவஸ்தானமும் அடைக்கப்பட்டுள்ளது.

மே 17 வரை ஊரடங்கு உள்ள நிலையில் அதன் பிறகு திருப்பதி தரிசனம் தொடங்கப்படுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை தரிசனம் தொடங்கினால் வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர்.

தற்போது கொரோனா தாக்கத்தால் சமூக இடைவெளி மிகுந்த அவசியமாகியுள்ளது. இதனால் திருப்பதியில் முன்பு போல கூட்டமாக மக்களை உள்ளே அனுப்ப முடியாது. ஆலோசனை ஒரு பக்கம் இருக்க, திருப்பதியின் அலிபிரி சோதனைச்சாவடி பகுதியில் கிருமி நாசினி சுரங்கங்கள் அமைக்கப்படும் பணியும் தொடர்ந்துள்ளது.

எனவே மே 18 முதல் திருப்பதி தேவஸ்தானம் திறக்கப்படலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே அதிகம் எழுந்துள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்று பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close