மே 7 முதல் டாஸ்மாக் திறப்பு!குடிமகன்கள் ஹாப்பி!!

சென்னை:
தமிழகத்தில் வரும் மே 7 ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் வரும் 7 ம் தேதி முதல் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படும். அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
டாஸ்மாக்கடைகள் திறக்கப்பட்டாலும் பார்கள் திறக்க தற்போதைய நிலையில் அனுமதி இல்லை.
மேலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கடைகள் திறந்திருக்க வேண்டும்.
சமூக இடைவெளியை கண்டிப்பாக??? கடைபிடிக்க வேண்டும்.!!!
மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதி இல்லை.
கொரோனா நோய் கட்டுப்பாடு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை.
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது
அப்போது முதல் தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு மாநிலங்களும் மதுபான கடைகளை மூடியது.
40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த கடைகளை இன்று (4 ம் தேதி) கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் மதுபான கடைகளை திறப்பது சமூக இடைவெளியை காற்றில் பறக்க விடும் செயல் என சமூக ஆர்வலர்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.















