
வட கொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பிரபல அமெரிக்க ஊடகம் CNN செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
உலக அளவில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் வட கொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் உன்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கித்தவிக்கும்போது அந்த சமயத்திலும் அணுகுண்டு சோதனை நடத்தி அமெரிக்காவுக்கே குடைச்சல் கொடுத்தவர் தான் கிம் ஜாங் உன்.
இதனிடையே தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில்கூட கலந்துகொள்ளாமல் கிம் ஜாங் உன் தவிர்த்துவந்தார். கொரோனா அச்சம் காரணமாக அவர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளாமல் இருக்கலாம் என அப்பொழுது கூறப்பட்டது.
ஆனால், சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கிம் ஜாங் உன் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக CNN செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து இதுவரை அதிகார பூர்வமாக வடகொரிய அரசாங்கம் எதுவும் தெரிவிக்கவில்லை















