fbpx
RETamil News

உலகளவில் கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 11 லட்சத்தை கடந்தது அதிர்ச்சி தகவல் .

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவி அனைத்து நாடுகளையும் அல்லோலப்பட வைக்கின்றது. இது ஒரு கொடிய தொற்று நோயாக இருந்தாலும் தற்போது வரை எந்த ஒரு நாடாளும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே இந்த தொற்று மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. முதல் நடவடிக்கையாக அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததோடு , கடும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

எத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கொரோனா நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியாததால் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் உலகளவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தையும் தண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close