fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம்களில் ராணுவவீரர்கள் தங்கியிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பேகிபாங் பகுதியில் உள்ள முகாமில் தங்கியிருந்த வயர்லெஸ் ஆபரேட்டரான அபிஷேக் ராய் குமார் என்ற வீரர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த தகவலை அறிந்த பாதுகாப்பு படையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் மருத்துவ சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அந்த ராணுவ வீரரின் தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் தீவீரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close