fbpx
RETamil News

ஆந்திரா – புதுச்சேரி மாநிலங்களுக்கிடையே புயல் கடக்கப்போவதால் ஆரஞ்ச் அலெர்ட் !

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல் தீவிர புயலாக இன்னும் சில மணி நேரத்தில் உருவாக உள்ளதாகவும்,இது ஆந்திர கடலோரத்தில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புயலின் காரணமாக ஆந்திரா மாநிலத்தின் கடலோரப் பகுதியில் இன்றும் , நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும், மேலும் கோதாவரி,விசாகப்பட்டினம் , கிருஷ்ண, குண்டூர் ஆகிய மாவட்டங்களும் இந்த புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகத்தான் ஆந்திரா – புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி பெதாய் புயல், தமிழகத்தின் தென்கிழக்கே 490கி.மீ தொலைவில், மணிக்கு 7கி மீ வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இதன் காரணமாக வட தமிழகத்தில் இன்று மாலை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் ஆகிய இடங்களில் மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close