fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

24 மணிநேரத்தில் 6654 பேருக்கு கொரோனா..! என்ன நடக்குது இந்தியாவில்..?

6654 new corona cases in india

டெல்லி:

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு  6,654  பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் நாள்தோறும் புதிய உச்சம் ஏற்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,25,101 ஆக இருக்கிறது.

அதே நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 51,784 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,720 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close