கொரோனா சிகிச்சை குறித்த வீடியோவுக்கு மறுப்பு வெளியிட்டும் வரதராஜன் மீது வழக்குப்பதிவு !!

கொரோனா சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியிட்ட வரதராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செய்தி வாசிப்பாளரான வரதராஜன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் தன்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது உறவினரை சிகிச்சைக்காக அனுமதிக்க பல மருத்துவமனைகளுக்கு அலைந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதிக்க பல மருத்துவமனைகளை அணுகியும் படுக்கை இல்லை என மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவமனை எம்டிக்கள், நிர்வாகிகளிடம் பேசியும் எந்த பயனுமில்லை.

இவ்வாறு உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.அவசியமில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம். எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்ததோடு, வரதராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று தெரிவித்திருந்தார்.
உடனே வரதராஜன் அரசின் சேவைகளை புகழ்ந்து ஒரு வீடியோ வெளியிட்டார்.அதற்கு எந்த பலனும் இல்லாமல்,
வரதராஜன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொற்று நோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.















