ஆரம்பிச்ச நாளில் இருந்தே அபாரம்…!கோடிக்கணக்கில் கல்லா கட்டும் டாஸ்மாக்!
High sales in Tasmac

சென்னை:
டாஸ்மாக் மதுக்கடைகளில் வியாபாரம் சூடுபிடித்து இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 133 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில தளர்வுகளின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் சனிக்கிழமை முதல் திறக்கப்பட்டன.
50 நாட்கள் கழித்து மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்று குடித்து, கொண்டாடினர்.
நேற்றைய தினம் டாஸ்மாக்கில் அதிக விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 133 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது.
ஆனால் சனிக்கிழமை அன்று மட்டும் 163 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானது. தொடக்க நாளை காட்டிலும் நேற்று 30 கோடி ரூபாய் குறைவு தான். ஆனாலும் இனி வரும் நாட்களில் வருவாய் அதிகரிக்கும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.















