
உலகமே இன்று கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயால் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருவதால் உலக மக்கள் பலரும் அதிக அளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் இயற்கை பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுற்றுசூழல் மாசு கணிசமாக குறைந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் ஊரடங்கு அமல்செய்யப்பட்டுள்ளதாலும் , அதன் மூலம் வாகனங்கள் போக்குவரத்து மற்றும் தொழிற்ச்சாலைகள் இயக்கப்படாமல் உள்ளதால் சுற்று சூழல் காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் நாசா வெளியிட்டுள்ள சமீபத்திய செயற்கைகோள் படங்களின்படி , வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் உலகின் மற்ற பகுதிகளையும் நாசா விஞ்ஞனிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.2015 முதல் 2019 மார்ச் மாதம் வரையிலான காலகட்டம் வரை ஏற்பட்டிருந்த காற்று மாசுபாட்டை இந்த படம் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.
உலகில் ஏற்பட்டுள்ள இந்த கொரோனா வைரசால் பல உயிர்களை நாம் இழந்தாலும் , மறைமுகமாக இதன் மூலம் ஒரு சில நன்மையையும் ஏற்பட்டுஉள்ளது.
இந்த செயற்கைக்கோள் படமானது உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காற்று மாசுபாடு எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகின்றது. இதன் மூலம் உலகில் இயற்கைசூழல் அதிகரிக்கப்பட்டு காற்று மாசு குறைந்துள்ளது தெரிகின்றது.