fbpx
RETrending Nowஉலகம்

ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு…! ரஷ்ய ‘ரணகளம்’…!

11 thousand people affected by corona in a single day in Russia

மாஸ்கோ: ரஷ்ய நாட்டில் ஒரே நாளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்தை எட்ட உள்ளது.கொரோனா தொற்றுக்கு இதுவரை 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

உலக நாடுகளை ஒரு வழியாக்கி வரும் கொரோனா வைரஸ் ரஷ்யாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  அந் நாட்டில்  5  நாட்களாக  தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில்  ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு  மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,77,160 ஆக இருக்கிறது.

உலகளவில்  கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் ரஷ்யா 5வது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close