RETamil Newsஉலகம்

ஊரடங்கால் சுமார் 60 ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம் ; பிரான்ஸ் சுகாதாரத்துறை மந்திரி பெருமிதம்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக உலகின் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் பிரான்ஸ் நாட்டிலும் அந்நாட்டு அரசு கடந்த மாதம் 13-ம் தேதி ஊரடங்கை அறிவித்தது.இந்த ஊரடங்கு அடுத்த மாதம் மே 11-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.இந்த முடிவுக்கு அந்நாட்டு மக்களும் நல்ல ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பிரான்ஸ் நாட்டு ‘ பொது சுகாதாரத்துறை பள்ளி’ மேற்கொண்ட ஆய்வை சுட்டிக்காட்டி சுகாதார மந்திரி ஆலிவர் வெறான் கூறியதாவது;

சரியான நேரத்தில் ஊரடங்கை நடைமுறை படுத்தியதால் , நாம் 60 ஆயிரம் மனித உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம். இந்த எண்ணிக்கையானது இதை விட கூடுதலாகவும் இருக்கலாம். இந்த நடவடிக்கையை எடுக்கப்படாமல் இருந்திருந்தால் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா அவசர பிரிவில் நமக்கு ஒரு லட்சம் படுக்கைகளின் தேவை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் நம்மிடம் இருக்கும் படுக்கைகளோ 10 ஆயிரம் தான். எனவே ஊரடங்கை அமல்படுத்தியதால் இப்பேரட்சினை அதிகமாக ஏற்படவில்லை.ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி கொரோனா அவசர சிகிட்ச்சை பிரிவில் நாம் மேலும் 10 ஆயிரம் படுக்கைகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய அவகாசம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமல்படுத்தியுள்ள இந்த ஊரடங்கானது பிரான்ஸ் நாட்டுக்கு மட்டும் கிடையாது ,அதை அமல்படுத்திய அனைத்து உலக நாடுகளுக்கும் இதன் பயன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close