REஉலகம்

சீனாவில் கொரோனா பாதித்து குணமாகியவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு

உலகிலேயே முதல் முதலில் இந்த கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுகாண் என்ற இடத்தில் தான் தோன்றியது. அந்த வைரஸ் தொற்றானது பல நாடுகளுக்கும் பரவி அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் தொற்று பல்வேறு தடுப்பு முயற்சியின் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டு அந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்களும் கடுமையான சிகிட்சையின் மூலம் சரிசெய்யப்பட்டனர்.

அவ்வாறு சிகிட்சை அளிக்கப்பட்டவர்களுக்கு சோதனை நடத்தியதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. அதனால் அவர்கள் குணமடைந்ததாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸில் இருந்து குணமாகிய பலருக்கும் சுமார் 70 நாட்களுக்கு பிறகு எந்த அறிகுறிகளும் இல்லாதநிலையில் மீண்டும் சோதனை செய்து பார்த்த போது அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது சீன அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்னரும் எந்த அறிகுறிகளும் இல்லாமல் மீண்டும் உடலில் கொரோனா இருப்பது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் இன்னும் எவ்வளவு கொரோனா தொற்று நோயாளிகள் இருக்கிறார்கள் என்பது பற்றிய சரியான தகவல்களை சீன அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

சீன சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி , இவ்வாறு மீண்டும் கொரோனா வைரஸ் உள்ளதாக சோதனையில் தெரியவந்த எவரும் மற்றவர்களுக்கு தொற்றை பரப்பியதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

இப்படி குமணமடைந்த கொரோனா நோயாளிகளுக்கு 60 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு குணமடைந்த நோயாளிகளின் உடர்பாகங்களில் கொரோனா தங்கியிருக்க வாய்ப்புகள் இருந்ததால் அவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆனால் அது பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் தென்கொரிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close