சத்தியமங்கலம்: ஆசனுார் அருகே, சிறுத்தையின் அட்டகாசம்…?
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த, ஆசனுார் மலை பகுதியில், ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும், சிறுத்தை அவ்வப்போது, கால்நடைகளை வேட்டையாடி வருவது வாடிக்கை.கடந்த, 3ம் தேதி இரவு பழங்குடி வாலிபரை சிறுத்தை தாக்கி கொன்றது. மீண்டும் அதே இடத்திற்கு மறுதினம் வந்தபோது அங்கிருந்த, இரண்டு நாய்களை வேட்டையாடியது. நேற்று முன்தினம் இரவு கன்றுகுட்டிமற்றும்எருமையை சிறுத்தை வேட்டையாடி கொன்றது.சிறுத்தையின் அட்டகாசத்தால் மலை கிராம மக்கள் பீதியில் உள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என,அவர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினரும் ‘ட்ரோன்’ கேமரா மற்றும் கண்காணிப்புகேமராக்களை பொருத்தியும், இரவு ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வனத்துறையினர் ஜீப்பில் வந்தபோது ஹெட்லைட் வெளிச்சத்தில், ஆசனுார் வனச்சரக அலுவலக கேட்டின் முன்புறம், சிறுத்தை ஒய்யாரமாக படுத்திருந்தது. சிறிது நேரத்தில் அந்த சிறுத்தை, அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று தலைமறைவானது.