தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு….
தேனி – அல்லிநகரம் நகராட்சியின் 29-வது வார்டு பகுதி மக்கள், தங்கள் பகுதியில் 5 தலைமுறைகளாக வசித்து வரும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.மேலும், தங்கள் பகுதியில் உள்ள நகராட்சி மயானம் அருகே காலியாக உள்ள அரசு நிலத்தில் மயானம் அமைப்பதற்கு பதிலாக, அங்கன்வாடிமையம்,சமுதாயக்கூடம் உள்ளிட்ட அத்தியாவசிய பொது கட்டமைப்புகளை அமைக்க வேண்டும்என்றும்அவர்கள்வலியுறுத்தினர்.இந்தகோரிக்கைகளை வலியுறுத்தி அல்லிநகரம் 29-வார்டு பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கோஷங்களை எழுப்பியபடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அவர்கள் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றபோது, போலீசார் நுழைவாயிலை அடைத்து
தடுத்துநிறுத்தினர்.இதனால்போலீசாருக்கும்போராட்டக்காரர்களுக்கும்இடையேகடும்வாக்குவாதம்ஏற்பட்டது.தொடர்ந்துபோராட்டக்காரர்கள்நுழைவாயிலைதிறந்துகொண்டுஉள்ளேசெல்லமுயன்றதால்,இருதரப்புக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதில் சிலர் கீழே விழுந்ததுடன், ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.